நகைக்கடை பகல் திருட்டு

Status: Open

Customer: mugugan

நான் முருகன் நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.கடந்த மாதம்  02.05.2023 அவிநாசி  JPS நகைக்கடைக்கு சென்றிருந்தேன் நான் என் மகளுக்கு 4 கிராம் செயின் வாங்கினேன்.ஒரு மாதம் கூட ஆகவில்லை
செயின் பிரிந்துவிட்டது.கடையில் சென்று கேட்டபோது வாங்கியபோது இருந்த விலையைவிட குறைந்த விலையில்
மாற்றித் தர ஒப்புக் கொண்டனர்  வாங்கிய போது தோராயமாக 23000 .அவர்கள் திருப்பி பெரும்பொழுது 21000 கூட அவர்கள் கொடுக்கவில்லை . யூடியூப் வீடியோக்கள் மற்றும் இந்தக் கடை பற்றிய நல்ல கருத்துகளை நம்ப வேண்டாம். நீங்கள் ஏற்கனவே இந்தக் கடையில் ஏதேனும் பொருளை வாங்கியிருந்தால், முதலில் புகழ்பெற்ற தங்கக் கடைக்குச் சென்று அதன் தூய்மையை சரிபார்க்கவும்.இந்தக் கடைக்குச் சென்று எதையும் வாங்காதீர்கள். ஒவ்வொரு தங்கமும் 18 காரட், ஆனால் 916 ஹால்மார்க் என்று நம்மை ஏமாற்றுகிறார்கள் & தூய்மை இயந்திரம் இல்லை!துாய்மை இயந்திரம் இல்லாமல் எந்த தங்கக் கடையும் இயங்குமா????? என்று யோசித்துப் பாருங்கள்
வாடிக்கையாளர்களை மரியாதையின்றி நடத்துகின்றனர். 5 பேர் மட்டுமே உள்ளே நிற்க முடியும்.

Category: Product or service quality

Issue Raise Date: June 6, 2023

State: Tamil Nadu

District: TIRUPUR

City: AVINACI

Created At: July 12, 2023

Complaint Image

Messages

No messages yet.


Add Message